கொஸ்கம சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் இருந்த ஆயுதங்களை சீன நிறுவனமொன்று கொள்வனவு செய்ய தீர்மானித்திருந்ததாகவும் இந்நிலையிலேயே அங்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொள்வனவு செய்வதற்காக குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் இருவர் அந்த முகாமுக்கு சென்று ஆயுதங்களை பார்வையிட்டுள்ளதுடன் அவற்றை முறையாக பொதி செய்யுமாறு அந்த நபர்கள் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கிருந்த ஆயுதங்களின் மொத்த பெறுமதி 18 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமெனவும் அதனை கொள்வனவு செய்வதற்காக இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான இராணுவ அதிகாரிகள் சிலர் சீனாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையிலேயே அந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் அந்த களஞ்சியசாலையிலிருந்து சகல ஆயுதங்களும் வெடித்து சிதறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments