ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் போது வீதித் தடை வேலி விழுந்து படுகாயமடைந்த ரோஹித்த அபேகுணவர்தன கொழும்பில் தனியார் வைத்தியாலையொன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் பேரணியின் போது பொலிஸாரின் வீதித்தடைகளையும் மீறி முன்னோக்கி செல்ல முயற்சித்த போது இருப்பிலான வேலி அவர் மீது விழுந்ததாலேயே அவர் காயமடைந்துள்ளார்.
இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது உடனடியாக அங்கிருந்தவர்களினால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
0 Comments