கொஸ்கம சாலாவ இராணுவ முகாமிலிருந்த ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் வீடுகளை இழந்த மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் அவிசாவளை கொழும்பு வீதியை மறித்து அந்தப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாங்கம் தமக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க உரிய வேலைத்திட்டங்களை இதுவரை ஆரம்பிக்கவில்லையென தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்றைய தினமும் இவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் திறக்கப்பட்டிருந்த வீதி மீண்டும் நேற்று முதல் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments