பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நல்லுறவை பேணும் வகையில் பொலிஸாரினால் நடமாடும் சேவை நடாத்தப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் இன்று கல்குடா பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த நடமாடும் சேவை பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எஸ்.நிஸாந்த வெதஹே தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நடமாடும் சேவையின் போது பொலிஸ் முறைப்பாடு, பிறப்பு, இறப்பு, காலங்கடந்த பதிவுகளுக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளல், தேசிய அடையாள அட்டை புதுபித்தல் மற்றும் புதிதாக விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் நடைபெற்றுள்ளன.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்குடா, பேத்தாளை, கும்புறுமூலை, கல்மடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொது மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments