Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அரச வைத்தியர்களின் அடிப்படை சம்பளம் 52,500 ரூபாயாக அதிகரிக்க தீர்மானம்

அரச வைத்தியர்களின் அடிப்படை சம்பளமானது 52,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என அரச பரிபாலன, நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று ஊவா மாகாண வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அரச அதிகாரிகளின் அடிப்படை சம்பளங்கள் 11,730 ரூபாயிலிருந்து 24,230 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ள அதே வேளை அரச வைத்தியர்களின் அடிப்படை சம்பளமானது 24,500இல் இருந்து 52,500ஆக அதிகரிக்கப்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments