இலங்கையில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு திமிலைத்தீவு மகா விஸ்ணு ஆலயத்தின் வருடாந்த உற்சவம்
இலங்கையின் மிகப்பழமையான விஸ்ணு ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்புஇ திமிலைத்தீவு மகா விஸ்ணு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வுடன் நிறைவுபெற்றது.
நூற்றுக்கணக்கான அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்திவர இன்று மாலை கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இலங்கையில் திருவிழாக்காலங்களில் நாடக பாணியில் திருவிழாக்கள் நடாத்தப்படுகின்ற ஒரேயொரு ஆலயமாக இந்த ஆலயம் விளங்குகின்றது.
ஸ்ரீகிருஸ்ணரின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் வகையில் திருவிழாக்காலங்களில் இந்த உற்சவங்கள் நடாத்தப்படுகின்றன.
கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இன்று இரவு இடம்பெற்ற திருக்கல்யாண உற்சவத்துடன் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவுபெறற்றது.
தமிழர்களின் பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் சுமந்ததாக இவ்வாறான விஸ்ணு ஆலயங்கள் தமது உற்சவங்களை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த உற்சவத்தின்போது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பெருமளவான அடியார்கள் பறவைக்காவடி ஏந்திச்சென்று தமது நேர்த்திக்கடனை நிறைவுசெய்வதை காணமுடிந்தது.
0 Comments