Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் யானை தாக்குதல்: ஆறு வயது சிறுமி பலி! தந்தை படுகாயம்!!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவக்கொடிச்சேனை பகுதியில் யானையின் தாக்குதல் காரணமாக ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது தந்தை படுகாயமடைந்துள்ளார்.
நேற்று மாலை 6.00மணியளவில் பாவற்கொடிச்சேனை, கலப்பங்கேணி பகுதியில்; குளிப்பதற்காக பொது கிணற்றிற்கு சென்ற தந்தை மற்றும் மகளை யானை தாக்கியதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
ஆறு வயது நிரம்பிய இராசதுரை லோஜினி எனும் மகள் இறந்துள்ளதுடன் , தந்தை பலமான தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய சிகிட்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே வேளை உயிரிழந்த சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளையே இவ்வாறு உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வவுணதீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வவுணதீவு பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருவதாக 

Post a Comment

0 Comments