அண்மையில் கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடி விபத்ததால் முழுமையாகவும் மற்றும் பகுதியளவிலும் சேதமடைந்த 645 வீடுகளும் , வர்த்தக நிலையங்களும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அடையாளங்காணப்படாத இடங்கள் இருப்பின் உடனடியாக பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்திற்கு அறியத்தருமாறு மாவட்டச் செயலாளர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருட் சேதம் தொடர்பான மதிப்பீடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக 76 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த சொத்துக்களுக்கான நட்டஈடு எதிர்வரும் 13ஆம் திகதி நிதியமைச்சு வழங்கும். அதனை எதிர்வரும் 14ஆம் திகதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றுஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments