Advertisement

Responsive Advertisement

எரிபொருளினால் 5 பில்லியன் இலாபம்!- சந்திமல்

நாட்டிற்கு இந்த வருடம் எரிபொருளினால் 5 பில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திமல் வீரக்கொடி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தம் கருத்து வெளியிட்ட சந்திமல் வீரக்கொடி,
இப்பொழுது உலக சந்தையில் பெற்றோலின் விலை 51 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ஆனால் இலங்கையில் நாம் விலையை அதிகரிக்கவில்லை,இதனை மக்களுக்கான சலுகையாக வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்தோடு மக்களுக்கான சில சலுகைகளை தாம் வழங்கும்போது சில இடையூறுகள் ஏற்படுவதாகவும் அதனைத் தவிர்த்து நிலையான எதிர்காலத்தை நோக்கி முன்செல்ல வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கனிய எண்ணெய்யின் மூலம் இலாபம் கிடைக்கும் வழிமுறைகளை கையாண்டுள்ளதாகவும் இதன் மூலமும் எதிர்காலத்தில் இலாபம் கிடைக்கும் எனவும் கூறினார்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எப்பொழுதும் உதவி செய்யும் என்றும், இன, மத வேறுபாடு இன்றிய கட்சியே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என பெற்றோலியம் மற்றும் பெற்றொலிய வாயு அமைச்சர் சந்திமல் வீரக்கொடி தெரிவித்தார்

Post a Comment

0 Comments