முச்சக்கரவண்டியை விட விலை குறைந்த நான்கு சக்கர வண்டி ஒன்றை இலங்கை மக்கள் பாவிக்கும் வழிமுறைகளை முன்னெடுத்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
குறிப்பிட்ட வாகனத்தை அவர் நான்கு சக்கர வண்டி என்று கூறினாலும் அது கார் என்று குறிப்பிடவில்லை.
இதுவரை விலை குறைந்த காராக டாடா நேனோ காணப்பட்டாலும் தற்போது அதன் விலை 14 இலட்சமாக கானப்டுகின்றது.
குறிப்பிட்ட வாகனம் பஜாஜ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது . Qute என அழைக்கப்படும் இதன் விலை 2000 டொலர் , சுமார் 3 இலட்சம் இலங்கை ரூபா.
இந்த வண்டிகள் சில தற்போது இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு தகுதி சான்றிதழ் வழங்க சோதனைகள் இடம்பெறுகின்றது.
0 Comments