சைவமும் தமிழும் தலைத்தோங்கும் மட்டு மா நகர் வடக்கே களுவன்கேணி தொடக்க எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச் சடங்கு உற்சவ மகா சக்தி விழாவின் இறுதி நாளாகிய இன்று மாலை தீ மிதிப்புடன் நிறைவு பெற்றது.
கடந்த 28ஆம் திகதி களுவன்கேணி சிங்காரத்தோப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து மடைப்பெட்டி எடுத்து வரப்பட்டதை தொடர்ந்து, ஆலயத்தின் உற்சவ காலத்துக்கான திருக்கதவு திறக்கப்பட்டு உற்சவ கால விசேட பூசைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் அனைத்து பூசைகளும் ஆலய பிரதம குரு சிவதொண்டர் சிவஸ்ரீ சோதிநாதன் அற்புதராஜ சர்மா ஐயா அவர்களினால் நடைபெற்றதுடன், ஏழு நாட்கள் கொண்ட உற்சவ கால பூசைகளை களுவன்கேணி மற்றும் அண்டிய கிராமத்து குடும்பங்களினால் குடும்ப பூசையாக இடம்பெற்றது.
இறுதி நாளாகிய இன்று மாலை தீ மூட்டப்பட்டு தீ மிதித்தல் வைபவத்துடன் பொலிகரும பூசை, கும்பம் சொறிதல் போன்றன பூஜைகள் இறுதி நாளாகிய இன்று இடம்பெற்றது.
இன்றைய தீ மித்தல் நிகழ்வினை தரிசிப்பதற்காக பல பாகங்களிலும் இருந்து அடியார்கள் வருகைதந்ததுடன், பல நூற்றுக்கணக்கான பெரியவர்கள் தொடக்கம் சிறியவர்கள் என தீ மித்தல் நேர்த்திக்கடன்களை முடித்தமையை காணக்கூடியதாக இருந்தது.
கடலும் கடல் சூழ்ந்த இடமாக அழகிய கிராமங்களை கொண்ட களுவன்கேணி கிராமத்தில் வேண்டிய வரத்தினை அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அன்னயைவளின் ஆலயமானது தற்பொழுது, ஆலய நிர்வாகத்தின் சிறந்த ஒத்துழைப்பு அத்துடன் கிராம மக்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஒத்துழைப்பின் காரணமாக அபிவிருத்தி கண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: