தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு தரக் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் 94 பக்க கோரிக்கை மனுவை அளித்தார்.
முன்னதாக இன்று காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் பிரதமரை நேரில் சந்தித்த அவர் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும்.
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்க வேண்டும். நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் பணியை விரைவுப் படுத்த வேண்டும். நதி நீர் இணைப்பை நடைமுறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தார்.
முதல்வருடன் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், முதல்வரின் தனிச் செயலர்களும் சென்றுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் இன்று மாலையே ஜெயலலிதா சென்னைக்கு திரும்ப உள்ளார். பிரதமர் மோடி- ஜெயலலிதா சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது.
0 Comments