கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை 21ஆம் திகதி பகல் 12 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரையில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம், மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ஹோமாகம, ருக்மல்கம, மத்தேகொட, கொடகம, பெலன்வத்த, மீபே, ஹங்வெல்ல, களுஅக்கல, பாதுக்க ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோக தடை அமுலாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நீர் விநியோகத் தடையானது, கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் காரணமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
0 Comments