பஸ் கட்டணங்கள் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து 3.2 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
3.2 சதவீத அதிகரிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அதிகரிப்பு 10 சதவீதத்துக்கும் அதிகமாயின் அமைச்சரவை அங்கிகாரம் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments