Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குளவி கொட்டுக்கிழக்காகி 10 பேர் பாதிப்பு

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட்டகொடை மடக்கும்புர மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 15.06.2016 அன்று காலை இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 05 பேர் பெண் தொழிலாளர்களும் மேலும் 5 பேர் ஆண்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்களில் 2 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Post a Comment

0 Comments