திருகோணமலை கந்தளாய் 98ஆம் குலனி பௌத்த விகாரை யொன்றின் ஆறு வயதுடைய சிறிய பௌத்த துறவியொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பௌத்த துறவி இருவரை இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் தம்மிக்க நேற்று செவ்வாய்கிழமை(14) உத்தரவிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 39 மற்றும் 17 வயதுடைய இரு பௌத்த துரவிகளே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கந்தளாய் 98ஆம் குலனி பௌத்த விகாரையில் ஆறு வயதுடைய பௌத்த துறவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக குறித்த துறவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து குறித்த பெற்றோர் தம்பலகமம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று செவ்வாய்கிழமை (14)காலையில் கைது செய்து அன்றைய தினமே பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பௌத்த துறவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவிப்பதோடு,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments