மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி வந்தாறுமூலை மகா விஸ்ணு ஆலயத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
19ஆம் திகதி காலை 10.00மணிக்கு ஆரம்பமாகும் நினைவுகூரும் நிகழ்வில் ஆலய முன்றிலில் நினைவுத்தீபம் ஏற்றுதல் நினைவு அஞ்சலி செலுத்துகை மற்றும் விசேட பூஜை ஆலயத்தில் நடைபெறவுள்ளதுடன் இறுதியாக அன்னதான நிகழ்வும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


0 Comments