Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மன்னாரில் சீரற்ற காலநிலையால் இயல்பு நிலை பாதிப்பு: படகுகளும் நீரில் மூழ்கின

மன்னாரில் பலத்த காற்றுடன் பெய்துவரும் மழையினால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது
நேற்று ஞாயிற்றுகிழமை இரவு பெய்த காற்றுடன் கூடிய மழையினால் பேசாலை பகுதியில் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல ரோலர் படகுகள் கடலில் முற்றுமுழுவதுமாக மூழ்கியுள்ளன. மேலும் பல படகுகள் கடுமையான சேதத்துக்குள்ளாகிய நிலையில் மீனவர்களால் கரைக்கு கொண்டுவரப்பட்டள்ளது.
நேற்று ஞாயிற்றுகிழமை காலை 8:30 மணிமுதல் இன்று திங்கள்கிழமை காலை 8:30 மணியரை மன்னார் மாவட்டத்தில் 185.5 மில்லிமீற்றர் மழைவீழ்சி பதிவாகியுள்ளது.
அதிக காற்றுடன் கூடிய மழையினால் கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மேதி சேதமடைந்தமையினால் படகுகள் கடலில் மூழ்கியுள்ளன.
இதன் படி 20 படகுகள் கடலில் மூழ்கியுள்ளன அல்லது காணாமல்போயுள்ளதுடன் 30 படகுகள் பலத்த சேதத்திற்குள்ளாகியநிலையில்  மீனவர்களால் மீட்டுள்ளது.
காற்று பல மாக வீசுவதால் கடல்ககொந்தளிப்பு அதிகமாக காணப்படுகிறது.
இதனால்  இன்று பேசாலை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.  இதேவேளை அதிகரித்துள்ள காற்றின்வேகம்  குறையாமையால் ஏணைய ரோலர் படகுகளை மன்னார் எருக்கலம்பிட்டிக்கு பின்புறமாக உள்ள முந்தல் என்னும் ஓடைபகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க பேசாலை மீனவர்கள் படகுகளை பேசாலையிலிருந்து குறித்த முந்தல் பகுதிக்கு நகர்த்தி வருகின்றனர்.
இதேவேளை மன்னார் நகர் பகுதியிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்று மீன் வரத்து குறைவடைந்தமையினால் மீன் சந்தையில் குறைவான வியாபாரிகளே மீன் விற்பணையில் ஈடுபட்டனர்.
மேலும் மன்னார் சின்னகடை பகுதியில் 7 குடும்பங்களை சேர்ந்த 26 நபர்கள் இடம் பெயர்ந்து நலன்புரி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 50 குடும்பங்களை சேர்ந்த 181 நபர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பட்டித்தோட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 நபர்கள் இடம் பெயர்ந்தள்ளனர்.
அதேபோன்று மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று படகுகள் சேதமடைந்துள்ளதுடன், தேவன்பிட்டியில் நான்கு படகுகள் சேதமடைந்ததுடன் ஒரு கடையும் சேதமாகியுள்ளது.
மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேலும் வெள்ள பாதிப்புக்கள் வர வாய்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.erIMG_2374IMG_2384

Post a Comment

0 Comments