வடகிழக்கு மாகாணத்தில் தமிழுக்கும் இந்து மதத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்ட காலத்தில் அதனை வளர்ப்பதற்காக துணிவோடு செயற்பட்டவர் சுவாமி தந்திரதேவா என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேவையின் பொருளாளர் எஸ்.புவனசுந்தரம் தெரிவித்தார்.
அமரர் சுவாமி தந்திரதேவாவின் 66வது ஜனனதின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள சுவாமி தந்திரதேவாவின் சிலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தாமரைக்கேணியில் உள்ள மங்கையற்கரசி இல்லத்தில் ஜனனதின நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கை இந்து ஒன்றியமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் கிழக்கிலங்கை இந்து ஒன்றிய செயலாளர் கதிர் பாரதிதாசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேவையின் பொருளாளர் எஸ்.புவனசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தமிழுக்கும் சைவத்திற்கும் சுவாமி தந்திரதேவா ஆற்றிய பணிகள் நினைவுகூரப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேவையின் பொருளாளர் எஸ்.புவனசுந்தரம்,
வேறு ஒரு நாட்டில் வேறு ஒரு மொழியில் மதத்தில் பிறந்தாலும் தமிழிழும் இந்து மதத்திலும் ஈர்க்கப்பட்டு அதனை தனது மூச்சாக இறுதிவரை கொண்டவர் சுவாமி தந்திரதேவா.அவரின் வாழ்க்கையினை ஒவ்வொரு இந்து மக்களும் பின்பற்றும்போது அவர்களின் வாழ்வு சுபீட்சம் அடையும் என தெரிவித்தார்.





0 Comments