Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

களனி ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்கின்றது

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் அந்த கங்கையின் நீர்மட்ட அதிகரிப்பு வெள்ள நிலைமை வரை இன்னும் ஏற்படவில்லையெனவும் ஆனாலும் இது தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பல பிரதேசங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஹிங்கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாகவும் இதனால் அந்த ஆற்றின் ஓரங்களில் வசிப்போரும் கவனமாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments