தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகளுக்கு அறவிடப்படும் பணத்தை வரையறை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சினால் குழுவொன்று நியமிக்கபட்டுள்ளதாக அந்த அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழுவின் அறிக்கையினை அடுத்து தனியார் வைத்தியசாலைகளில் நடத்தப்படும் ஒவ்வொரு சத்திர சிகிச்சைகளுக்கும் தனித்தனியாக அறவிடப்படும் கட்டணம் வரையறை செய்யப்படும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதன் மூலம் அனைத்து தனியார் வைத்தியசாலைகளிலும் ஒரே கட்டண அடிப்படையில் சத்திர சிகிச்சைகளை நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பல்வேறு வகைகளில் கட்டணம் அறவிடப்படுவதால் சாதாரன சத்திரசிகிச்சைகளிலும் கூட பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாகவே இந்த விடயம் குறித்து சுகாதார ஆராய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments