Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வெள்ளைவான் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்பட வேண்மெனக் கோரி காணாமல்போனவரின் குடும்பங்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
நேற்று அம்பாறையில் நடைபெற்ற அதேசயம் இன்று காலை மட்டக்களப்ப காந்தி பூங்கா முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் கடத்தில் அச்ச சூழ்நிலை எழுந்துள்ளதை கண்டித்தும் அவ்வாறான சம்பங்கள் ஏற்படாத வகையில் தடுக்க கோரியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காந்தி பூங்காவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் சென்று அங்கு மஜர் கையளிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் மட்டக்களப்பு பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயம் சென்று அங்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடகிழக்கில் இருந்து காணாமல்போனவர்களின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மீண்டும் ஒரு வெள்ளைவான் கடத்தல் காலத்தினை ஏற்படுத்தி எங்களை அச்ச நிலைக்கு தள்ளவேண்டாம் என இங்கு கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த காலத்தில் உறவுகளை பறிகொடுத்து வேதனைகளில் நாங்கள் வாடிக்கொண்டிருக்கும் நிலையில் எங்களுக்கு நேர்ந்த கதி இன்னொருவருக்கு நேரும் நிலைமை ஏற்படக்கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குற்றம் செய்தவர்களை விசாரணைசெய்வதற்கும் தண்டனை வழங்குவதற்கும் சட்டம் இருக்கும்போது சட்ட ரீதியற்ற முறையில் நடைபெறும் இவ்வாறான கடத்தல்களை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வெள்ளைவான் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.DSC_1762DSC_1771jh

Post a Comment

0 Comments