இலங்கையில் வௌ்ளப் பெருக்கினாலும் மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்குத் தயார் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கிஷோப் வௌியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
வௌ்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அழிவு குறித்து தான் கவலையடைவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.


0 Comments