பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சபை கூடிய நிலையில் அங்கு மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்ட விடயம் தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் மற்றும் ஆளும் தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக முதலில் 5 நிமிடங்கள் சபை ஒத்தி வைக்கப்பட்டு கூடிய போதும் தொடர்ந்தும் அமைதியின்மை நிலவியதால் சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
0 Comments