2013 ஆம் ஆண்டில் க. பொ. த. (உயர்தரம்) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடையே 19 தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர்ப் பட்டியல் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சகல பீடாதிபதிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கு கல்விக் கல்லூரி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு அமைய அந்த பீடாதிபதிகளால் தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளை சேர்த்துக் கொள்வதற்காக நாளை (05) உரிய அழைப்புக் கடிதங்களை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மாணவர்களைப் பதிவு செய்யும் பணியை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் முதல் வாரத்துக்குள் குறித்த பாட நெறிகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய நியமனம் பெற்ற ஆசிரியர்களின் சேவை வசதிகள் குறைபடாமல் தமது கடமைகளைச் செய்துகொண்டு போவதற்காக, கஷ்ட பிரதேசங்களில் ஆசிரியர் தேவைபாட்டை நிறைவு செய்யும் நோக்கத்தில் இம்முறை கல்விக் கல்லூரிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்தலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தேவைப்பாடுகளுக்கு அமைய சேர்த்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட கொள்கையடிப்படையிலான தீர்மானத்தின் மேல் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் காணப்படும் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் தேவைப்பாடு தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அதற்கு அமைய இனிமேல் தாமதமின்றி ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமாக இருக்கும். அத்துடன் 2014 ஆம் ஆண்டில் க. பொ. த. (உயர்தரம்) பரீட்சையில் தோற்றிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல் 2016 ஜூன் மாதம் வெளியிடப்படும். அதில், மாணவ ஆசிரியர்களை செப்டம்பர் மாதமளவில் சேர்த்துக்கொள்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே 2016 திசம்பர் மாதமளவில் 2015 ஆம் ஆண்டில் க. பொ. த. (உயர்தரம்) பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்களை தேசிய கல்விக் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்வதற்கு வர்த்தமானி அறிவித்தல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டம் இடப்பட்டுள்ளது. அதற்கு அமைய 2012 க. பொ. த. (உயர்தரம்) ஆண்டுக்காக சேர்த்துக்கொள்ளப்பட்ட 3,500 ஆசிரிய மாணவர்களுக்குப் பதிலாக 2013 க. பொ. த. (உயர்தரம்) ஆண்டுக்காக ஆசிரிய மாணவர்கள் 4,700 பேர் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளார்கள். அவ்வாறே, எதிர் வரும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஒரு கல்வியாண்டில் சேர்த்துக்கொள்ளப்படும் ஆசிரிய மாணவர் எண்ணிக்கையை 6,200 வரை அதிகரிப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அவ்வாறே, அடையாளம் காணப்பட்டுள்ள 1,190 விரிவுரையாளர்கள் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனநுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கானல் ஆட்சேர்ப்பு இனி மேற்கொள்ளப்படும். தேவைப்பாட்டுக்கு அமைய புதிய விரிவுரையாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.
0 Comments