Advertisement

Responsive Advertisement

முச்சக்கர வண்டி- மோட்டர் சைக்கிள் விபத்து: மட்டக்களப்பில் 6 பேர் காயம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கடற்கரை வீதி, மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்றில் 06 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதியே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயங்களுக்குள்ளான ஒரு பெண், இரு குழந்தைகள் உட்பட 06 பேர் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாரதூரமாக காயம்பட்ட இளைஞர் ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments