நாட்டில் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்போது இடி மின்னல் ஏற்படக் கூடுமெனவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தற்போது நாட்டில் தொடரும் உஷ்ணமான காலநிலை இன்னும் 2 வாரங்களுக்கு தொடருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments