மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை(18)இடம்பெறவுள்ளது.ஈழத்தில் மிகவும் பிரமாண்டமான விநாயகப்பெருமானின் 64 அடி உயர சுதை விக்கிரக இராஜ கோபுரம் அமையப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
இவ்வாலயம் பற்றிய இராமாயணக் கால கதையும் ஒன்றுள்ளது.சீதையைத் தேடி வந்த அனுமன் திருக்கோயில் சங்கமாங்கண்டி பிள்ளையார் ஆலயத்திலிருந்து நேரே இங்கு வந்ததாகவும் அடர்ந்த வனத்தினூடே காணப்பட்ட வழிப்போக்கில் இப் பிள்ளையாரைத் தரிசித்து அவருடைய ஆசி பெற்று பின் மட்டக்களப்பு மாமாங்கம் அடைந்து அங்கிருந்து சென்று நூவரெலியாவில் சீதையைக் கண்டதாகவும் கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கண்டியை ஆட்சி செய்த பநீ விக்கிரம இராஜசிங்க மன்னன் சித்திரைப் பௌர்ணமி தினத்தன்று இங்கு தனது பிரதானிகளுடன் வருகை தந்து ஒரு கொம்பன் யானையைப் பரிசாக கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
0 Comments