மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட வெல்லாவெளி அம்மன்குளம் மற்றும் கணேசபுரம் பிரதேசத்தில் தனிநபரொருவருக்குச் சொந்தமான நெற்களஞ்சியசாலை மற்றும் மக்களின் குடியிருப்புக்கள் என்பவனவற்றை காட்டுயானைகள் அடித்து சேதப்படுதத்திய சம்பவங்கள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
வெல்லாவெளி அம்மன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த சி.சீவரெத்தினம் என்பவருக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலையின் கதவுகளை உடைத்து அங்கிருந்த 850 மேற்ப்பட்ட நெல் மூட்டைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள் கணேசபுரத்தில் உள்ள மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து பாரிய சேதம் விளைவித்துள்ளது.
இச்சம்பவம் பற்றி அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கையில்,
வெல்லாவெளி பிரதேசத்தில் நீணட நாட்களாக தொடரும் இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு உத்தரவாதம் இல்லாமல் இருப்பதாகவும் இவ்வாறான காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையழிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
குறித்த நெற்களஞ்சிய சாலையினை இரவுவேளை சுமார் ஒரு மணியளவில் காட்டுயானை தாக்கும் போது வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அருகிலுள்ள தங்களது அலுவலகத்தில் இருந்தார் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் என தெரிவித்தனர்.
அத்தோடு கணேசபுரத்திலுள்ள பல குடியிருப்புகளுக்குள் உட்புகுந்த காட்டு யானை அங்குள்ள பயிர்களையும் துவம்சம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த பிரதேசங்களில் அசாதரணமாக இரவு வேளைகளில் உட்புகும் காட்டு யானைகளினால் பொதுமக்கள் தங்களின் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இரவுப் பொழுதை கழிப்பதாகவும், மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு உரிய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.
அத்துடன் மட்டக்களப்பு அதிபரே! மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளே!, வனஜீவராசி அதிகாரிகளே! மக்களின் உயிருக்கு பொறுப்புகூறுவது யார்?. என குறித்த பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டனர்.
0 Comments