Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 
அண்மைக் காலமாக பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இன்று முதல் பாரியளவிலான நடவடிக்கை ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளனர்.
விசேட அதிரடிப்படையினதும் பொலிஸாரினதும் கூட்டு முற்சியாக பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பின்னர் பாதாள உலகக் குழுச் செயற்பாடுகள் காணப்படும் ஏனைய மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட உள்ளது.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் மேற்பார்வையின் கீழ் அலகுகாக இந்த விசேட பிரிவுகள் இயங்க உள்ளன.
24 மணித்தியாலமும் கண்காணிப்பு நடாத்தி பாதாள உலகக்குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பாதாள உலகக்குழு உறுப்பினர்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள், குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments