கொட்டதெனியாவ சேயா என்ற 4 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சமன்ஜயலத் என்ற நபருக்கு இன்று நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட போது அந்த சம்பவத்தில் குற்றவாளியாக அவர் இனங்காணப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயதுடைய சேயா என்ற சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி குறித்த நபர் கொலை செய்திருந்தார். இந்த சம்பவமானது நாட்டில் பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments