Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டு - அம்பாறை மாவட்ட க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள் முழு விபரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 53 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதில் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 29 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதுடன் ஏறாவுர் கல்விக் கோட்டத்தில் 16 மாணவர்களும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் 8 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 29 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் 13 மாணவிகள் இதில் ஆக கூடுதலாக 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் 4 மாணவிகளும், காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலயத்தில் 4 மாணவர்களும், காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 3 மாணவிகளும், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் 3 மாணவர்களும், காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் ஒரு மாணவியும், காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் ஒரு மாணவியும் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அதே போன்று ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவுர் அலிகார் தேசிய பாசடரைலையில் 4 மாணவர்களும், ஏறாவூ அறபா மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் ஏறாவுர் அல் முனீறா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், அஸ்ஹர் பெண்கள் தேசிய பாடசாலையில் 3 மாணவர்களும், றகுமாணிய்யா மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், மாக்கான் மாக்கார் வித்தியாயத்தில் ஒரு மாணவரும் 9 பாடங்களிம் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 
ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்களும், ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் ஒரு மாணவரும். மற்றும் மிறாவோடை அல்ஹிதாய வித்தியாலயத்தில் ஒரு மாணவரும், வாழைச்சேனை ஆயிஸா மகளிர் வித்தியாலயத்தில் ஒரு மாணவியும் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் மட்டு. பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் நால்வர் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். வ.மதுப்பிரசாலினி, எஸ்.ஜினுஜான,வ.கிர்சனா, வீ.தசாயினி ஆகியோரே இந்த மாணவர்களாகும்.
அம்பாறை மாவட்டம்
அம்பாறை கல்முனை கல்வி வலயத்தின் பற்றிமா கல்லூரி, பாலிகா கல்லூரி, சாஹிரா கல்லூரி, உவெஸ்லி கல்லூரி உள்ளிட்ட 10 பாடசாலைகளின் 35 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுக்கொண்டுள்ளனர்
கல்முனை பற்றிமா கல்லூரில் 08 மாணவர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 08மாணவிகளும் கல்முனை சாஹிறா தேசிய கல்லூரியில் 06மாணவர்களும், கல்முனை உவெஸ்லி உயர்தரக்கல்லூரியில் 05மாணவர்களும் நிந்தவூர் அல்அஸ்ரக் தேசிய கல்லூரியில் 2 மாணவர்களும் காரைதீவு இ.கி.மி.பெண்கள் பாடசாலையில் இருவரும் 9 பாடங்களிலும் ஏ சித்திபெற்றுச்சாதனை படைத்துள்ளனர்.
மேலும் காரைதீவு விபுலானந்த மத்தியகல்லூரி; சண்முகா மகா வித்தியாலயம் அல்மிஸ்பா வித்தியாலயம் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தலா ஒரு மாணவர் வீதம் 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.
அதேபோல் 8ஏ 1பி சித்திகள் அதிகம் காணப்படுதாகவும் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் பலர் குறைந்தபெறுபேறு எடுத்திருப்பதனை அவதானிக்கக்கூடியதாயுள்ளதெனவும் அதற்கான ஆய்வை மேற்கொண்டு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments