அம்பாறை மாவட்டம் பொத்துவில் கொட்டுக்கல் கடலில் நீராடியபோது நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை காணாமற்போன இரு இளைஞர்களும் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இப்றாலெப்பை முஹம்மது பஹத் (17 வயது), றஹுமான் ராஹித் (19 வயது) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்து சடலங்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை சுற்றுலா நிமித்தம் பொத்துவிலுக்கு சென்ற இவர்கள், கொட்டுக்கல் கடலில் நீராடியவேளையில் காணாமல் போயிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பொத்துவில் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.
0 Comments