Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய உர மானியம் இன்று முதல் அமுல்

வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உர மானியத் திட்டத்தை இன்று முதல் அமுல்ப்படுத்தவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் உரத்திற்கு பதிலாக விவசாயிகளுக்கு எவ்வித பணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
50 கிலோகிராம் உர மூடையொன்றின் சந்தை விலை 2500 ரூபாவாக காணப்படுகின்றது.
இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய விவசாயிகளுக்கு 350 ரூபா மானிய அடிப்படையில் உர மூடையொன்று வழங்கப்பட்டது.
புதிய திட்டத்தின் அடிப்படையில் குறைந்த விலைக்கு உரம் வழங்குவதை விடுத்து உரம் கொள்வனவு செய்ய பணம் வழங்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments