மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் அடையாளந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு குருக்கள் மடம் பகுதியில் இந்த சடலம் கண்ணடெுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமொன்றே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த பெண் மஞ்சள் நிற ஆடையை அணிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பெண்ணின் உடலில் எவ்வித வௌிப்புற காயங்களும் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தற்போது குறித்த சடலம் உள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இன்று நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





0 Comments