மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று அதிகாலை இந்த மாசிமக தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மாசிமக உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
மாசிமக உற்சவத்தினை சிறப்பிக்கும் வகையில் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து மாசிமக விசேட 1008 சங்குகள் கொண்ட மகா சங்காபிசேக பூஜைகள் நடைபெற்றதுடன் விசேட யாகமும் நடாத்தப்பட்டது.
யாகபூஜையினை தொடர்ந்து சங்காபிசேகம் நடாத்தப்பட்டதுடன் வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி வீதியுலா செல்லும் நிகழ்வு அதிகாலை நடைபெற்றது.
சுவாமி வெளி வீதியூடாக மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியை அடைந்ததும் அங்கு விசேட அபிசேகம் நடைபெற்று தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
n10





0 Comments