சம்பள உயர்விற்காக காத்திருந்த அரச ஊழியர்களுக்கு தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக, அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வின் முதற்கட்டமாக 2,500 ரூபாவை அடுத்த மாதம் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கான சுற்றுநிருபம் தயாராகியுள்ளது என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றுநிருபம் தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், பெரும்பாலும் அடுத்த மாதத்திலிருந்து அந்தச் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வருடம் ஜனவரி முதல் இந்த உயர்வு அமுலுக்கு வருவதால் மார்ச் மாத சம்பளத்துடன் மூன்று மாதங்களுக்கான நிலுவையாக 7,500 ரூபா சேர்க்கப்படுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.


0 Comments