முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.
அவரின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் கடுவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் யோஷித்தவின் விளக்கமறியல் காலத்தை தொடர்ந்தும் நீடித்துள்ளது.
இந்நிலையில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் பிணைமனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் தனது பாதுகாவலர்கள் சகிதம் உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.


0 Comments