இலங்கை அதிபர் சேவை iii ஆம் வகுப்புக்கான போட்டிப் பரீட்சையில் தெரிவான 4,076 பேருக்கான நியமனக் கடிதங்கள் மார்ச் மாதம் முடிவதற்கு முன்னர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறித்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு இறுதியாக அதிபர் சேவையின் iii வகுப்புக்கு தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை நடைபெற்றிருந்தது. அதன் பின்னர் சேவை அடிப்படியிலேயே பதவி வெற்றிடம் பூரணப்படுத்தப்பட்டது. அதன்படி 5,600 பதவி வெற்றிடங்கள் நிரப்புவதற்கு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 19,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தெரிவு செய்யப்பட 4,076 பேருக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments