Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி - 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி பிரச்சிணைக்கு முற்றுப்புள்ளி வைத்து மாவட்டத்தின் கல்வியை உயர்த்துவதுதான் எனது கல்விப் பணியாக இருக்கிறது. கடந்த காலங்களில் பல கல்விப்பணிகளை மாவட்டத்தில் முன்னெடுத்தேன். வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் திடீரென மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உருவாக்கி அதன் பௌதீக வளப்பற்றாக் குறையினை நிவர்த்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்விப்பணியை துரிதப்படுத்தியுள்ளேன். 


மட்டக்களப்பு ஆணைப்பந்தி இந்து கல்லூரியினை இயன்றளவு பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து முழுமையான ஒரு பாடசாலையாக என்னால் செய்து கொடுப்பேன் என வர்த்தக வாணிப துறை அமைச்சின் விஷேட நிபுணரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சோ.கணசேமூர்த்தி அவர்கள் தெரிவித்தார். 

மட்டக்களப்பு ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் தமிழ்மொழித் தின நிகழ்வும் அதிபர் திருமதி. தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் வெபர் விளையாட்டு மைதானத்தில்  (16.02.2016) பி.ப 2.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக வாணிப அமைச்சின் விசேட நிபுணரும், முன்னால் பிரதி அமைச்சருமான சோ.கணேசமூர்த்தி பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர் A.J.வசந்தராஜா, மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் K. பாஸ்கரன், பிரதிகல்விப் பணிப்பாளர் சிவசங்கரி கங்கேஸ்வரன் ஆகியோர்களும், விசேட அதிதிகளாக உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் வீ.லவக்குமார், உதவி கல்விப் பணிப்பாளர் (தமிழ்) D. யுவராஜன் பிரதி அதிபர் திருமதி.சோதிமுத்து சுந்தரம், பாடசாலை அபிவிருத்திச் செயலாளர் S.மணிமாறன், அதிபர் T.அருமைத்துரை, உடற்கல்வி ஆசிரியர் திருமதி.விஜயலெட்சுமி கருணாகரன் உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வினோதஉடை போட்டி, தடைதாண்டல், ஆசிரியர்களுக்கான தொப்பி மாற்றுதல், எறிபந்து, போத்தலில் நீர் நிரப்புதல், பழைய மாணவிகளுக்கான போட்டி, அணிநடை போன்ற சாரதா இல்லம், அருந்ததி இல்லம், நளாயினி இல்லம் போன்ற  இல்லங்களுக்கிடையிலான போட்டியில் 1ம் இடத்தினை நளாயினி இல்லம் (375 புள்ளிகள்), 2ம் இடம் சாரதா இல்லம் (346 புள்ளிகள்), 3ம் இடம் அருந்ததி இல்லம் (319) பெற்றுள்ளது. 

இவர்களுக்கான வெற்றிகேடயங்கள் அதிதிகளால் வழங்கப்பட்டன. அவர் தொடர்ந்து பேசுகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி நிலையை எடுத்து கூறியுள்ளேன். இதனை நிவர்த்தி செய்து தருவேன் என பிரதமர் தெரிவித்தார் எனக் குறிப்பிட்டார். 

















Post a Comment

0 Comments