Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருதில் கைக்குண்டுகள் மீட்பு

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது நகரில் வியாழக்கிழமை (04.02.2016) இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
சாய்ந்தமருது 16 இல் உள்ள வளவொன்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த கைக்குண்டுகள் தென்பட்டுள்ளன.
அது பற்றி வளவின் உரிமையாரான மீராமுஹைதீன் அப்துல் அமீன் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததும் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குண்டு செயலிழக்கச் செய்யும் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வியாழன் இரவு குண்டுகளை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments