Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உணர்வுகளை மதிக்க தெரியாமல் இருந்தால் உண்மையான சுதந்திரம் இல்லை பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

சுதந்திரம் ஒவ்வொரு மனிதனும் நான் சுதந்திரமாக இருக்க வேண்டும் என எண்ணுகின்ற வேளையில் மற்றவருடைய சுதந்திரம் ,மகிழ்ச்சி , அவனுடைய தனித்துவம் ,அவனுடைய இனம் , மதம் ,அவனுடைய உணர்வுகளை மதிக்க தெரியாமல் இருந்தால் உண்மையான சுதந்திரம் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இலங்கையின் 68 வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்இடம்பெற்றன ..
மட்டக்களப்பு மாவட்டத்தில் 68 வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு  பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன .
தேசிய சுதந்திர தின நிகழ்வு இளையோர் தலைமைத்துவ அபிவிருத்தி எனும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் . சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் சுதந்திரம் என்பது வார்த்தைகளில் கூறுகின்ற விடயம் அல்ல , சுதந்திரம் ஒவ்வொரு மனிதனும் நான் சுதந்திரமாக இருக்க வேண்டும் என எண்ணுகின்ற வேளையில் மற்றவருடைய சுதந்திரம் ,மகிழ்ச்சி , அவனுடைய தனித்துவம் ,அவனுடைய இனம் , மதம் ,அவனுடைய உணர்வுகளை மதிக்க தெரியாமல் இருந்தால் உண்மையான சுதந்திரம் இல்லை .
இந்த வகையில் இந்த நாட்டில் நாங்கள் இரண்டு மொழி பேசுகின்ற , நான்கு மதங்களை கைக்கொள்கின்ற ஐந்துக்கு மேற்பட்ட இனங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் .
இவர்கள் ஒவ்வொருவரும் பல கலாசார விழ்ம்யங்களால் இணைந்தும் வேறுபட்டு இருகின்றார்கள் .இருந்த போதிலும் இந்த மதங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினை ,வேற்றுமை என்பது ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை தவிர்ந்த இன்னொரு மனிதனை மதிக்க தவறுகின்ற அந்த சந்தர்ப்பத்திலே தான் இந்த வேற்றுமைகள் ,முரண்பாடுகள் இடம்பெறுகின்றது .
எங்களை தனித்துவ படுத்துவதற்காக நாங்கள் எங்களை அடையாள படுத்துவதற்காக கூர்மைப்படுத்தி கொள்கின்ற சில விடயங்கள் மற்றவர்களுடைய உணர்வுகளையும் , அவர்களுடைய தனித்துவத்தையும் பாதிக்கின்றவையாக மாறுகின்ற போது இயட்சையாக இனங்களிக்கிடையே மோதல்களும் , முரண்பாடுகளும் ஏற்படுகின்றது .
எனவே இந்த சுதந்திர தினம் எங்களுக்கிடையே ஐக்கியத்தையும் ,ஒற்றுமையையும் ,சமாதானத்தையும் , சமத்துவத்தையும் தருகின்ற ஒரு தினமாக அமைய வேண்டும் என தனது சுதந்திர தின செய்தியாக இன்று இடம்பெற்ற 68 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துக்கொண்டார் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வீச்சுகல்முனை புனித அன்னம்மாள் ஆலய பங்குதந்தை எக்ஸ் .ஐ .ரஜீவன் , மட்டக்களப்பு ஜிம்மா பள்ளிவாயல் மௌலவி நளீம் ,மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன் , மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ் ,நெடுஞ்சழியன் , மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .
bcvxz

Post a Comment

0 Comments