தேசிய சுதந்திரத் தின நிகழ்வில் தமிழில் தேசியக் கீதம் பாடப்பட்டமை மக்களிடையே இனவாதம் மற்றும் குரோதத்தை ஏற்படுத்தும் செயற்பாடு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
”நான் இனவாதி அல்ல. இந்தியாவை பார்த்தால அங்கு பல்வேறு மொழிகளை பேசுவோர் இருக்கின்றார்கள் ஆனால் அங்கு ஒரே மொழியிலேயே தேசிய கீதம் இருக்கின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் இவ்வாறுதான்.
சிங்களம் புரியாதவர்களுக்கு அரத்தத்தை விளங்கிக் கொள்வதற்காக தமிழில் எழுத்து மூலம் மொழி பெயர்ந்துள்ளமை தொடர்பாக பிரச்சினையில்லை. ஆனால் பாடும் போது ஒரு மொழியிலேயே பாடப்பட வேண்டும். இவ்வாறு இரண்டு மொழிகளில் பாடுவது இனவாதத்திற்கு இட்டுச் செல்லும். ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் வாக்களித்தது இதற்காகவா என கேட்கிறேன்”. என அவர் தெரிவித்துள்ளார்


0 Comments