Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாய்த்தவறி உண்மையை வெளியிட்டார் மகிந்த!

கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தவறுதலாக உண்மையை கூறியுள்ளார்.

அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
'யார் குற்றம் செய்திருந்தாலும் வழக்கு தாக்கல் செய்யுங்கள். தந்தைமார் செய்த தவறுகளுக்காக மகன்மாரை தண்டிக்கும் பழக்கம் நாட்டில் இல்லை. யோஷித்த உட்பட 5 பேர் பண சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு நிதி வருவதை தடுக்கவே நாங்கள் அந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தோம். குப்பையான கோப்புகளை தேடிக்கொண்டிருக்காமல், ஆட்களை கொண்டு வேலையை ஆரம்பியுங்கள் என்று இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்" என மகிநத ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் பல முறை தான் தவறிழைத்ததாகவும் தனது பதவிக்காலத்தில் மோசடியாளர்களை நெருக்கமாக்கி கொண்டதால், தவறு நேர்ந்ததாகவும், ஆனால் தான் தவறு செய்யவில்லை எனவும் பலதடவைகள் கூறியிருந்தார்.
மேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, பல அமைச்சர்களின் கோப்புகள் தன்வசம் இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தந்தை செய்த தவறுகளுக்கு மகன்மாரை தண்டிக்கும் பழக்கம் நாட்டில் இல்லை என்று அண்மையில் கூறியிருப்பதன் மூலம் தான் தவறு செய்திருப்பதை முன்னாள் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments