Home » » கவனம் கடைகளில் சிவப்பு வர்ணச் சாயம் பூசி கலப்படம் செய்யப்பட்ட சிவப்பு அரிசி

கவனம் கடைகளில் சிவப்பு வர்ணச் சாயம் பூசி கலப்படம் செய்யப்பட்ட சிவப்பு அரிசி

சிவப்பு நிற கலவை கலந்த சிவப்பு அரிசி மலையக நகர் மற்றும் தோட்ட பகுதிகளில் வியாபார ஸ்தலங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கொள்வனவு செய்யும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு வர்ணச் சாயம் பூசி கலப்படம் செய்யப்பட்ட சிவப்பு அரிசி மலையக வியாபார பகுதியில் உள்ளதாகவும் இவ்வாறு சாயம் பூசி நூதன முறையில் வியாபார நிலையற்களில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கல்முனை, அம்பாறை, சம்மாந்துறை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யும் இந்த அரிசி தொகைகளிலேயே இவ்வாறு கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்ணச் சாயம் பூசி கலப்படம் செய்யப்பட்ட அரிசி மாதிரிகள் சந்தையில் உள்ளதா என்பது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் சந்தையில் திடீர் சோதனை செய்து அரிசி மாதிரிகளை பெற்று பரிசோதனை நடத்துமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனினும் இவ்வாறு இறக்குமதி செய்யும் பொழுது அரிசி தொகைகளை பரிசீலனை செய்து வியாபாரிகள் இறக்குமதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கலப்படம் செய்த அரிசிகளை மக்கள் கொள்வனவு செய்து உட்கொள்ளும் போது பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இவ்வாறான அரிசிகளை கொள்வனவு செய்யும் போது மக்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.rise-arise-brise-c
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |