Advertisement

Responsive Advertisement

மட்/துறைநீலாவணை கிராமத்திலுள்ள வீதிகளையும்,அபிவிருத்திகளையும் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் கண்டும் காணாமலும் உள்ளனர்.

துறைநீலாவணை கிராமமானது முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமமாகும்.இக்கிராமத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட  வீதிகளையும்,பிரதானவீதி,மேற்கு வீதிகளையும் மீள்புனரமைப்பு செய்வதில் அரசியல் வாதிகளும், அதிகாரிளும் கண்டும் காணாமலும் உள்ளனர்.

இந்த கிராமத்தின் நிலையைப் பார்க்கும் போது எனக்கு கவலையளிக்கின்றது.ஒரு சில அரசியல்வாதிகள் மட்டும்தான் இந்த கிராமத்தின் அபிவிருத்திகள் மீது அக்கரையுடன் செயற்படுகின்றனர். இவ்வாறு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் துறைநீலாவணை கண்ணகி சனசமூக நிலைய வீதி திறப்பு விழாவில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு  உரையாற்றுகையில் மேலுள்ளவாறு தெரிவித்தார். 

நால்லாட்சி அசாங்கத்தினால் பிரதியமைச்சர் அமீரலியின் பத்து இலட்சம் ரூபா நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீதி திப்பு விழா கிராமஅபிவிருத்தி சங்கத்தலைவர் சோ.மயில்வாகனம் தலைமையில் நடைபெற்றது. அவர் மேலும் பேசுகையில், இக்கிராமத்தில் உள்ளவர்கள் படித்த உயர்தரத்தில் உள்ளார்கள்.இக்கிராமத்தின் தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கிராமத்தில் உள்ளவர்கள்,பொதுமக்கள் என்னிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.நாங்களும் இக்கிராமத்தின் தேவைகளையும், குறைபாடுகளையும் தாயாரித்து திட்டங்களை முன்மொழிந்து உரியவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம். இதுவரையும் இக்கிராமத்தின் வீதிகள் முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை .நூற்றுக்கு மேற்பட்ட வீதிகள் மணல் வீதியாக காட்சி தருகின்து. 

பிரதானவீதிகள் உடும்பின் முதுகு போல் தேய்வடைந்துள்ளது.பொதுமக்கள்,மாணவர்கள் எனப்பலரும் போக்குவரத்து செய்யமுடியாமல் அல்லல் படுகின்றனர்.துறைநீலாவணை பிரதான வீதி போடுவதற்கு 2010ஆம் ஆண்டு கிராமத்தில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் 200 லோட் கல் வீதி போடுவதற்குரியவகையில் கொட்டப்பட்டுள்ளது.முளுமையாக வீதியைபொடுவதற்குரியவகையில் நிதி பற்றாக்குறை நிலவுகின்றது.நானும் முயற்சி செய்துவருகின்றேன்.தயவு செய்து துறைநீலாவணை கிராமத்தில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளை மீள்புனரமைப்பு செய்வதற்குரிய வழிமுறைகளை பிரதியமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டும் எனத்தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஆசிரியர் இ.லிங்கநாதன்,பிரதியமைச்சரின் பட்டிருப்பு தொகுதி இணைப்பாளர் கா.கைலாசபதி,மீன்பீடி சங்கத்தலைவர் செ.பூபாலரெத்தினம்,  மீன்பிடிசங்க செயலாளர் பூ.இராசநாயகம்,முதியோர் சங் க தலைவர் அ.மகேஸ்வரன், கிராமஅபிவிருத்தி சங்கத்தலைவர் பி.செல்வநாயகம்,மகளிர்சங்க தலைவி திருமதி. க.கலாமணி,செயலாளர் த.சாரதா உட்பட பொதுமக்கள் பலர் வீதி திறப்புவிழாவில் கலந்துகொண்டனர்.







Post a Comment

0 Comments