Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இராணுவத்தினரை பாதுகாக்க மஹிந்தவும் , கோத்தாவும் கையொப்பமிட்டனர்

இராணுவத்தை பாதுகாக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் கையொப்பமிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணையிலிருந்து இராணுவத்தினரை பாதுகாக்கும் வகையில் இராணுவத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் 10 இலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி இன்று காலை கொழும்பு சம்புத்தாலோக விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவும் அது தொடர்பான ஆவணத்தில் கையொப்பமிட்டு 10 இலட்சம் கையொப்பம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments