Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை மார்ச், ஏப்ரலில் அமுல்

புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையின் அமுலாக்கம் எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இடம்பெறும் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அடையாள அட்டையில் அச்சிடப்படும் புகைப்படத்தின் அளவு உள்ளிட்டவை குறித்த நிர்ணயிக்கும் சட்ட மூலம் எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், புதிய தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படங்களை விநியோகிக்கும் நிறுவனம், அரசாங்கத்தில் தம்மை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments