Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மீன் பிடிக்கச் சென்றவர் பரிதாப மரணம்: மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலம் அருகில் இன்று மீன்பிடித்துக்கொண்டிருந்தவர் வாவிக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு திராய்மடு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பென்சமின் ஜுலியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வாவிக்குள் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடிக்கட்டில் இருந்து வலை வீசியபோது தவறி வீழ்ந்து வலையில் சிக்குண்டு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தவிறி வீழ்ந்தவர் நீருக்கடியில் உள்ள பள்ளம் ஒன்றில் வலையுடன் சிக்குண்டதன் காரணமாகவே அவரினால் நீந்தி தப்பிக்க முடியாமல்போனதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments