சுதந்திரம் இல்லாத நாட்டில் என்னால் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது. எனது குடும்பமும் எனது நண்பர்க ளும் சிறையில் வாடும் போது என்னால் சுதந்திரமாக செயற்பட முடியாது. அதேபோல் எனது அணியினர் அரச நிகழ்வுகளை புறக்கணிக்கும் நிலையில் என்னால் அவ்வாறு அரச நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையின் அரச நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் இயற்ற அவசியமில்லை. சிங்களத்தை இன்று தமிழில் இயற்ற கேட்பார்கள், இன்னும் சிலபேர் நாளை உருது மொழியிலோ அல்லது அரேபிய மொழியிலோ தேசிய கீதம் இயற்ற அனுமதிக்க வேண்டும் என்று போராட ஆரம்பிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று அபயாராம விகாரையில் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் பின்னர் கேசரிக்கு தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார். அவர் மேலும் கூறுகையில்,
கேள்வி : -பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பில் உங்க ளின் நிலைப்பாடு என்ன?
பதில்:- அதைப்பற்றி எந்த கருத்தும் என்னிடம் இல்லை. ஏனெனில் இவர்கள் இன்று புதிதாக இணையவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதே இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தானே செயற்பட்டனர். ஆகவே அதில் புதிய மாற்றம் ஒன்றும் இல்லை.
கேள்வி:- அவருக்கு எவ்வாறான பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்:- அதை என்னால் தெரிவிக்க முடியாது. நான் சொல்லும் பதவியை அவர் வாங்கிக்கொள்ளவும் போவதில்லை. ஆகவே அவருக்கு எவ்வாறான பதவியாவது கிடைக்கட்டும்.
கேள்வி:- அபயாராம விகாரை கூட்டத்தில் என்ன கலந்துரையாடப்பட்டது?
பதில்:- இத்தாலியில் இருந்து வந்துள்ள இலங்கை பிரஜைகள் சிலரையும் சிவில் அமைப்பினர் சிலரையும், தொழிற்சங்க உறு ப்பினர்கள் சிலரையும் நான் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினேன். இலங்கையின் இப்போதைய நிலைமைகள் தொடர்பில் அவர்கள் எனக்கு தெளிவுபடுத்தினர். சர்வதேச மட்டத்தில் அவர்களின் பார்வை எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பில் எனக்கு தெளிவுபடுத்தினர். இன்று நிலைமை அவ்வாறு தான் உள்ளது. எனக்கு இந்த நாட்டில் நடப்பதை விடவும் அவர்களுக்கு தான் நன்றாக தெரிகின்றது.
கேள்வி:- சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொள்ளாதது ஏன்? புறக்கணிக்கப்பட்டுள்ளீர்களா?
பதில்:- அழைப்பு கிடைக்கப்பெற்றது. ஆனால் நான் கலந்துகொள்ளவில்லை. இன்று எனக்கு சுதந்திரம் இல்லை. எனது மகன், எனது நண்பர்கள் சிறையில் உள்ளனர். பல அச்சுறுத்தல்கள், குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்கள் மத்தியில் என்னை அவமதிக்கின்றனர். சுதந்திரம் இல்லாத நாட்டில் என்னால் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது. அதேபோல் எனது அணியினர் அரச நிகழ்வுகளை புறக்கணிக்கும் நிலையில் என்னால் அவ்வாறு அரச நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது.
கேள்வி:- குடும்பத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இப்போது எவ்வாறான நிலையில் உள்ளீர்கள்?
பதில்:- என்னால் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது சகோதரர்கள், எனது புதல்வர்கள், மனைவி என அனைவரையும் தண்டிக்க பார்க்கின்றனர். என்னை மனதளவில் வீழ்த்தி அரசியலில் இருந்தும் என்னை நம்பியுள்ள மக்களிடம் இருந்தும் ஒதுக்கி வைக்க இவர்கள் அனைவரும் முயற்சிக்கின்றனர். எவ்வாறு இருந்தாலும் எனது குடும்பமும் எனது விசுவாசிகளுமே எனக்கு உள்ள மிகப்பெரிய பலம். அதை எப்போதும் நான் இழக்க மாட்டேன்.
கேள்வி:- புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கதைக்கின்றனர். இத னால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை அடையுமல்லவா?
பதில்:- அவ்வாறு எதுவும் நடக்காது. அவ்வாறு கட்சி இரண்டானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைவரும் புதிய அணியில் இணைந்துகொள்வார்கள். இப்போது கட்சி செல்லும் நிலையில் நான் அவ்வாறு நினைகின்றேன். ஏனெனில் மக்கள் எந்தப்பக்கம் உள்ளனரோ அந்தப் பக்கம் தான் மக்க ளின் பிரதிநிதிகளும் இருக்க வேண்டும். மக்கள் இல்லாது கட்சியை உருவாக்கவும் முடியாது, மக்களின் ஆதரவு இல்லாது கட்சியாக செயற்படவும் முடியாது. ஆகவே அவ்வாறான நிலையில் பிரதிநிதிகள் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
கேள்வி:- அவ்வாறு உருவானால் நீங்கள் புதிய அணிக்கு ஆதரவை வழங்குவீர்களா?
பதில்:- நான் இப்போதும் அவர்களுடன் தான் உள்ளேன்.
கேள்வி:- அப்படியாயின் நீங்கள் புதிய கட்சிக்கு செல்லத் தயாரா?
பதில்:- புதிய கட்சியை பற்றி நான் கதைக்கவில்லை. ஆனால் நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் புதிய அணியொன்றை எதிர்பார்க்கின்றனர்.அதைப்பற்றி கதைக்கின்றனர். ஆகவே அதற்கான தேவை ஒன்று ஏற்பட்டுள்ளதுஎன நான் நம்புகின்றேன். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மக்கள் முழுமையாக வெறுக்கின்றனர். அவ் வாறான நிலையில் மாற்றம் அவசியமானதே. அதையும் நான் நம்புகின்றேன்.
கேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உங்களை ஆதரிக்கின்றதா?
பதில் :- என்னை முதலில் கட்சியை விட்டு வெளியில் தள்ளியவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தான். ஐக்கிய தேசியக் கட்சியினர் நிராகரிக்க முன்னர் ஸ்ரீலங்கா காரர்கள் என்னை நிராகரித்து விட்டனர். அவர்கள் என்னை வேண்டாம் என கூறும்போது மக்கள் என்னை ஆதரிக்கின்றனர். ஆகவே நான் மக்கள் பக்கம் இருப்பதே சரியானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பதாதையை மாத்திரம் வைத்துகொண்டு எதையும் செய்ய முடியாது. கட்சிக்கு என்ற கொள்கை ஒன்று அவசியம். அதன் கொள்கையை அழித்துவிட்டு எம்மால் இருக்க முடியாது.
கேள்வி:- உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?
பதில்:- நல்ல விடயம், காலத்தை கடத்தாது உடனடியாக தேர்தலை வைக்க வேண்டும். மீண்டும் பிரதேச சபைகளை பலப்படுத்த வேண்டும். கண்முன்னே அனைவரும் அழிவதை எம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
கேள்வி:- கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் புதிய அணியை எதிபார்ப்பதாக கூறுகின்றனர். இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்:- உண்மையில் அதுதான் இன்றைய தேவையாக உள்ளது. புதிய அணியை உருவாக்க விமலும்,உதய கம்மன்பிலவும் முயற் சிப்பதாக கூறுகின்றனர். இது முழுமையான பொய். அவர்களை அவ்வாறு தூண்டுவதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் தான். பிரதேச சபை, உள்ளூராட்சி சபை, மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரினதும் அழுத்தம் இவர்களின் வாய்களில் வெளிவருகின்றது. அதை தவறாக ஒருசிலர் காட்சிப்படுத்தி இன்று ஊட கங்களிலும் அவ்வாறு காட்சிப்படுத்தப்படுகின்றது. விமலுக்கோ, டலஸ், கம்மன்பிலவுக்கோ கட்சியை பிரிக்க வேண்டிய தேவை இல்லை.
கேள்வி:- தாமரை மொட்டு சின்னத்தில் புதிய அணியை உருவாக்குவது என்ற கதைகள் எந்தளவு உண்மை?
பதில்:- நீங்கள் தான் அவ்வாறு ஒவ்வொரு சின்னங்களை கூறுகின்றீர்கள். நீங்கள் தான் ஒவ்வொரு எண்ணங்களை எனது மன தில் பதிக்கின்றீர்கள். தாமரை மொட்டு சின்னமா, ரோஜா மொட்டு சின்னமா என நாங் கள் தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு நீங்கள் தான் எங்களை கொண்டுவந்துள்ளீர்கள். இறுதியில் நாங்கள் அவ்வாறு தான் செல்லவேண்டி உள்ளது.
கேள்வி:- பொது எதிரணி உருவாகாதா?
பதில்:- நாங்கள் அவ்வாறு நினைக்கவி ல்லை, என்னை எப்படியேனும் பிரிக்கவே பார்க்கின்றீர்கள். அப்படி என்றால் நான் புதிய கட்சியை உருவாக்க வேண்டிய நிலைமை வந்தே தீரும். அவ்வாறு நான் புதிதாக கட்சியை உருவாக்குவதாக இருந்தால் நிச்சயமாக தெரிவிப்பேன். அதுவரையில் என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்.
கேள்வி:- தமிழில் தேசிய கீதம் இயற்றுவதை எதிர்ப்பது ஏன்?
பதில்:- நான் தமிழை எதிர்க்கவில்லை, எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் கூறியதை தவ றாக பொருள்படுத்த வேண்டாம். இலங் கையின் அரச நிகழ்வுகளில், முக்கிய வைபவங்களில் தமிழில் இயற்ற அவசியமில்லை. சிங்கள மொழியும் பெளத்த கொள்கை யும் வெளிப்பட் டால் மாத்திரம் போதுமானது. இன்று தமிழில் இயற்ற கேட்பார் கள், இன்னும் சிலபேர் நாளை உருது மொழியிலோ அல்லது அரேபிய மொழியிலோ தேசிய கீதம் இயற்ற அனுமதிக்க வேண்டும் என்று போராட ஆரம்பிப்பார்கள். அவ்வாறு சென்றால் இறுதியில் இந்த நாடும் எமது கொள்கையும் எங்கே போவது.
கேள்வி:- உங்களின் இந்த தோல்விக்கு தமி ழர் தரப்பு தான் காரணம் என்ற கருத்தில் இப் போதும் உள்ளீர்களா?
பதில்:- நான் அவ்வாறு கூறியதில்லை, இப்போதும் அவ்வாறன நிலையில் நான் இல்லை. இந்த நாட்டையும் மக்களையும் நான் நேசிக்கின்றேன்.
கேள்வி:- எதிர்க்கட்சி தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?
பதில்:- நாங்கள் தான் இப்போது எதிர்க்கட்சி. நாங்கள் தான் இந்த நாட்டில் நல்லது கேட் டது தொடர்பில் கதைக்கின்றோம். அதை தவிர நாட்டை பிரிக்கும் நபர்களை நாங்கள் எதிரணியாக கருதப்போவதில்லை.


0 Comments